Important Notice
கவனகர் ஐயாவின் முக்கிய அறிவிப்பு:
அபிவர்மன் தம்பதியர்களான,
முத்துசாமி & கோமதி கவனகர் ஐயாவிடம் கடந்த 20 வருடங்களாக வேலை பார்த்து வந்தனர்.
கவனகர் ஐயா அவர்களை முழுவதும் நம்பி அனைத்துப் பொறுப்புகளையும் கவனித்துக் கொள்ளும்படி கொடுத்திருந்தார்.
ஆனால், இவர்கள் பல முறைகேடுகள் செய்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு கவனகர் ஐயா அவர்களை பணி நீக்கம் செய்துவிட்டார்.
அபிவர்மன் தம்பதி கவனகர் ஐயாவின் WEBSITEஐ முடக்கி விட்டனர்.
இதனால் Website மூலம் ஆர்டர் போடமுடியாமல், கவனகர் ஐயா ஆபீஸ் நம்பர் & கவனகர் ஐயா உதவியாளர் நம்பர் என்று நினைத்து, இவர்கள் நம்பருக்கு போன் செய்து ஆர்டர் கொடுப்பவர்களுக்கு, இவர்கள் இன்னும் கவனகர் ஐயாவிடம் பணி புரிந்து கொண்டு இருப்பது போலவே நாடகமாடி, Followers அனைவரின் நம்பர்களை வைத்துக் கொண்டு WhatsApp மூலம் ஆர்டர் எடுத்து, இவர்கள் GPay நம்பர் கொடுத்து பணம் வாங்கி, கவனகர் ஐயாவுக்கு எதிராக தனியாக வியாபாரம் நடத்தி வருகின்றனர்.
அபிவர்மன் தம்பதி கவனகர் ஐயாவின் YOUTUBE CHANNELன் உரிமையையும் முடக்கி வைத்துள்ளனர்.
அபிவர்மன் தம்பதி கவனகர் ஐயாவின் Followers அனைவருக்கும் மெசேஜ் அனுப்பி, அவர்கள் இன்னும் கவனகர் ஐயாவுடன் இருப்பது போலவே நாடகமாடி, ஆன்மீக டூர் ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி, ஐயாவின் Followers-ஐ அவர்களின் வியாபாரத்திற்கு உபயோகப்படுத்தி வருகின்றனர்.
அபிவர்மன் தம்பதி இன்னும் கவனகர் ஐயாவிடம் பணிபுரிவது போலவே நாடகமாடி, DONATION அனுப்ப விரும்பி போன் செய்பவர்களிடம் அவர்களுடைய GPay நம்பர் கொடுத்து பண மோசடி செய்கின்றனர்.
கடந்த ஏப்ரல் 2026ல் கூட, சேலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியிடம் ₹15,000-ஐ கவனகர் ஐயா பேரைச் சொல்லி அவர்கள் GPay நம்பருக்கு பணத்தை வாங்கிக்கொண்டனர்.
நன்கொடை கொடுத்தவருக்கு, கவனகர் ஐயா அனுப்புவது போலவே வாழ்த்துச் செய்தியும், ஆசீர்வாதங்களும் கொண்ட அழகான கம்ப்யூட்டரில் டிசைன் செய்யப்பட்ட வாழ்த்து அட்டையையும் அனுப்பி பணத்தை ஏமாற்றிவிட்டனர்.
(ஏமாந்தவர் அனுப்பிய Screenshot ஆதாரம் உள்ளது.) பின்னர் அந்தப் பெண்மணி போராடி அந்தப் பணத்தை அபிவர்மனிடம் இருந்து திரும்ப வாங்கினார்.
அபிவர்மன் தம்பதி இன்னும் கவனகர் ஐயாவிடம் பணிபுரிவது போலவே நாடகமாடி கீழ்க்கண்ட பல வியாபாரக் குழுக்களை நடத்தி வருகின்றனர்:
- Abivarman
- Abivarman
- Abivarman
- Abivarman
இந்தக் குழுக்களில், அவர்கள் ஐயாவிடம் பணிபுரிந்தபோது சேகரித்து வைத்திருந்த Followers மற்றும் அன்பர்களின் மொபைல் நம்பர்களை உறுப்பினர்களாக சேர்த்து, கவனகர் ஐயாவுக்கு எதிராக அவர்களின் வியாபாரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இது போன்ற அபிவர்மன் குழுக்களில் நீங்கள் இருந்தால் உடனே அந்தக் குழுவை விட்டு வெளியேறுங்கள்.
கடந்த 6 மாத காலமாக அபிவர்மன் நடத்தி வரும் குழுக்களில் கவனகர் ஐயாவின் நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள் ஏதேனும் வந்துள்ளதா?
இல்லையே 🤔
கவனகர் ஐயா செய்து வரும் நற்பணிகள் குறித்து ஏதேனும் பதிவிட்டுள்ளார்களா?
இல்லையே 🤔
இவர்கள் மறைமுகமாக, கவனகர் ஐயாவிற்கே தெரியாமல் உங்களை நன்றாக உபயோகித்து வருகின்றனர். புரிந்து கொண்டு உடனே விழித்தெழுங்கள். உஷாராகுங்கள். 🙏
"Kavanagar Ayya-SSS WhatsApp Community" என்பது மட்டுமே ஒரிஜினல் குழு.
கவனகர் சிற்சபை நிர்வாகியான என் நம்பர் 9841464388 எந்த குழுவில் உள்ளதோ அதுவே உண்மையான குழு.
அந்தக் குழுக்களில் நீங்கள் சேர விரும்பினால் விருப்பம் தெரிவியுங்கள். Joining Link அனுப்பி வைக்கிறேன்.
இது போல அபிவர்மன் தம்பதி செய்து கொண்டிருக்கும் முறைகேடுகள் பல.
ஆகையால், கடந்த டிசம்பர் 2025 முதல், கவனகர் ஐயாவுக்கும், எங்கள் கவனகர் சிற்சபை அமைப்புக்கும், இந்த அபிவர்மன் தம்பதிக்கும் எந்த ஒட்டும் இல்லை. உறவும் இல்லை.
அதேபோல், இவர்கள் ஏற்பாடு செய்யும் டூருக்கும், இவர்கள் விற்கும் பொருட்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இவர்களிடம் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், அபிவர்மன் தம்பதி செய்த செயல்களால் கவனகர் ஐயா மிகுந்த மனவலியும், மன உளைச்சலும் அடைந்துள்ளார்.
ஆகவே, அபிவர்மன் நம்பரை உங்கள் போனில் "கவனகர் ஐயா" பெயரில் Save செய்து வைத்திருந்தால், அதை உடனே Delete செய்து விடுங்கள்.
கவனகர் சிற்சபை நிர்வாகியான என்னுடைய9841464388 என்ற நம்பரை மட்டும் "கவனகர் சிற்சபை / KAVANAGAR SITHSABAI" என்று Save செய்து வைத்துக் கொள்ளுங்கள். 🙏
கவனகர் ஐயாவின் உண்மையான விசுவாசியான உங்களை போலிகளிடம் இருந்து உஷார்படுத்த வேண்டியது அவசியமும் கட்டாயமும் ஆகும்.
அதனால், இந்தத் தகவல்களை உங்களுக்குத் தெரியப்படுத்தி ALERT செய்கிறோம்.
நன்றி 🙏
உண்மையுடன்,
நிர்வாகி
கவனகர் சிவசிற்சபை
